உயிர் வாழ உதவி வேண்டி !
அன்பு வலைப்பதிவுலக நண்பர்களே,
சற்று சிரமம் பார்க்காமல் இப்பதிவை வாசித்து விடவும் என்ற வேண்டுகோளுடன்:
******************************
தமிழ் வலையுலகில் பதியத் தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமான அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு, இன்று ஒரு மின்மடல் அனுப்பியிருந்தார். விவரங்களுக்கு அவரது உயிர் வாழ உதவி நாடி பதிவை வாசிக்கவும், இயன்ற அளவில் உதவி செய்யுமாறு உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
அன்பு தற்போது அவ்வளவாக வலை பதிவதில்லை என்பதாலேயே, அவரது வேண்டுகோள் பதிவின் தொடுப்பை தருவதற்காக, இப்பதிவை இடுகிறேன். நன்றி.
****************************
நண்பர் சிங்கை அன்பு அவர்களின் பதிவு:
Sun 5 Nov 2006
உயிர்வாழ உதவி நாடி…
Posted by அன்பு under அனுபவம்/நிகழ்வுகள்
இனிய வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். நீண்டநாட்களாக வலைப்பதியாமல் இருந்தாலும் ஒரு நல்ல செயலுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவு.
கடந்த 29 அக்டோபர் 2006 ஞாயிறு - ஹிந்து நாளிதழில் ஸ்வேதா எனும் நான்கு வயது குழந்தை உயிர்வாழ உதவி நாடி ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. ஸ்வேதா, ‘இருதயத்தில் ஓட்டை’ என பொதுவாக அறியப்படும் Atrial Septal Defect(ASD) என்ற பிரச்னையால் அவதியுறுகிறாள். தற்போது சென்னை - ராமச்சந்திரா மருத்துவமனையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அந்த துளையை அடைக்க “திறந்த இருதய அறுவைச்சிகிச்சை” தேவைப்படுகிறதாம். குழந்தைக்கு இருக்கும் இந்தப் பிரச்சினையே நம்மை கலவரப்படுத்தும்போது - சிகிச்சைக்கு ரூபாய் 1,25,000/- என்று குறிப்பிடப்பட்டு பணப்பிரச்னையால் - அறுவைச் சிகிச்சைக்காக இன்னும் நாள் குறிக்கப்படாமல் - ஸ்வேதா சிரமப்படுகிறாள்.
ஸ்வேதாவுக்கு உதவ, இந்தக் குட்டிக்குழந்தை தொடர்ந்து உயிர்வாழ உங்கள் உதவி மிக அவசியம். உங்களால் இயன்ற உதவியை தயவுசெய்து செய்யவும். நல்ல விஷயங்களை இன்றே, இப்பொழுதே செய்ய வேண்டும் என்று கூறுவார்கள் அதனால் நாமும் இப்போதே ஆரம்பிப்போமே.
(வலக்கை - இடக்கை - சொற்றொடரும் ஞாபகம் வந்தாலும்) தற்போது என்னால் இயன்ற தொகையாக ரூ. 10,000 அளிக்க முடிவெடுத்துள்ளேன், நண்பர்களே தொடருங்கள்…
இன்று இது விஷயமாக தொடர்புகொண்டவுடன் ‘என்றென்றும் அன்புடன்’ பாலா, உடனே மருத்துவமனையை தொடர்புகொண்டு மேல்விபரம் பெற்று என்னிடம் தெரிவித்தார். கவுசல்யா-வின் படிப்புக்காக என்று ஆரம்பித்து நமது வலைப்பதிவாளர்களை நற்செயலில் ஈடுபடுத்தியவர். இதிலும் எல்லா உதவியும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். அதனால் உங்களது உறுதிமொழியை இங்கே அளித்தால் எப்படி பணம் அனுப்புவது என்பது பற்றிய மேல் விபரம் உங்களை தொடர்புகொண்டு தெரிவிப்போம். அல்லது நீங்களாகவே நேரடியாக அனுப்ப முடிவுசெய்தாலும் உங்கள் விருப்பபடி செய்யுங்கள். ஆனால் இன்றே… இப்பொழுதே…!
ஸ்வேதா விரைவில் பூரண குணம் அடைய என்னுடைய வேண்டுதலும், பிரார்த்தனைகளும்…
மேல் விபரங்களுக்கு: பாலா (balaji_ammu@yahoo.com), ராம்கி (rajni_ramki@yahoo.com) & அன்பு (lsanbu@gmail.com)
நீங்களே காசோலையாகவோ (Cheque), வரைவோலையகவோ (D.D) அனுப்ப விரும்பினால்,
Sri Ramachandra Hospital, A/c Baby S. Swetha என்ற எடுத்து
Sri Ramachandra Hospital, Porur, Chennai 600 116 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
பி.கு: ASD என்னும் இதயதுளையை சரிசெய்ய open heart surgery இல்லாமல் ஒருவித பலூன் (Amplatzer - device closure) மூலமும் அடைக்க இயலும். முதலில் துளை இந்த பலூனால் அடைபட முடியுமளவு சிறியதாக இருக்கவேண்டும் மற்றப்படி இதற்குண்டான செலவு அதிகம். இதில் எந்த நிலையினால் ஸ்வேதாவுக்கு surgery என்று முடிவுசெய்தார்கள் தெரியவில்லை. அதனால் நம்மால் முடிந்த அளவு உதவி செய்து - குழந்தையை குறைந்த வலியுடன் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட வழிசெய்வோம்.
*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா
### 255 ###
31 மறுமொழிகள்:
Test !
ennal mudinththa oru pinnUtta kayamai
the hyperlink doesn't seem to be working...
???
பாலா!
நானும் என்னுடைய வலைப்பூவில் இதனை அறிவிக்கிறேன்.
நம்மால் இயன்ற நன்மையைச் செய்வோம்!
பாலா! ஒசூருக்கு அருகில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஊரில் உள்ளா இருதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் எப்பேர்ப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளையும் குறைந்த கட்டணத்தில்(நோயாளியின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு) செய்கிறார்களாமே! அங்கே முயற்சித்தார்களா?
அந்த மருத்துவமனை இருக்கும் ஊர் பற்றிய விவரங்கள் நாளை விசாரித்து சொல்கிறேன்.
ஒசூர் அருகில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் "நாராயண ஹிருதாலயா"
//Pot"tea" kadai said...
the hyperlink doesn't seem to be working...
//
It is working for me. Anyway, I have reproduced Anbu's appeal in my posting itself. Pl. read.
Thanks !
நாமக்கல் சிபி,
பதிவிட்டமைக்கும், தகவலுக்கும் நன்றி.
குழந்தையின் பெற்றொரிடம் (மருத்துவமனை வாயிலாக) பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
//குழந்தையை குறைந்த வலியுடன் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட வழிசெய்வோம்//
குழந்தை ஸ்வேதா வலியும் குறைந்து குணமும் ஆக, அடியேன் பிரார்த்தனைகள்.
பெற்றோர் கவலையும் மாற, திருவேங்கடமுடையான் திருவருள் என்றும் உண்டு.
பாலா,
சென்னையில் இருந்து காசோலை எளிதா? (preferred)
இல்லை இங்கிருந்து ICICI bank transfer எளிதா என்று தனி மடலில் சொல்கிறீர்களா?
நன்றி பாலா, சிபி மற்றும் நண்பர்களுக்கு.
நாராயண ஹிருதலாயாவில்தான் பாகிஸ்தான் சிறுமி - நூரு-க்கு இதே சிகிச்சை செய்யப்பட்டது. இந்த ASD க்கு ஹிருதலாயாவில் சிறப்பான முறையில் சிகிச்சை செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன். இருந்தாலும், குழந்தையின் வீட்டில் ஏற்கனவே ராமச்சந்திராவை தொடர்புகொண்டுவிட்டதால் - மாற்று வழி பற்றி கருத்தெழுதவில்லை. Device Closure-க்கு ரூ. 1.45 லட்சம் கேள்விப்பட்டுள்ளேன்.
ஸ்வேதா தொடர்பாக ஹிருதலாயாவின் மருத்துவர் சுனிதா மகேஸ்வரி அவர்களை தொடர்புகொண்டுவிட்டு எழுதுகிறேன். நன்றி.
KRS,
I have sent an email to you. Pl. check and respond.
//ஸ்வேதா தொடர்பாக ஹிருதலாயாவின் மருத்துவர் சுனிதா மகேஸ்வரி அவர்களை தொடர்புகொண்டுவிட்டு எழுதுகிறேன். நன்றி.
//
அன்பு,
நன்றி
பாலா,
பொருளுதவியை எவருக்கு எப்படி அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கவும்.
என்னால் இயன்றதை செய்யத் தயாராயிருக்கிறேன்.
காலம் தாழ்த்தாமல் மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படவேண்டும்.
அன்புடன்,
ஹரிஹரன்
Dear Hariharan,
If you tell me (by mail) the amount to be donated, I will give it to the concerned and take it from you later.
You could transfer the amount as you already have my bank account details
Friends,
I spoke to the GM of Ramachandra hospital, who mentioned that about 25000 is collected till now and the surgery will happen in a week's time.
Unfortunately, swetha's parents don't have a contact number.
Will update as and when I have some information.
enRenRum anbudan
BALA
அன்பு பாலா,
மேலதிக தகவல்களுக்கு நன்றி.
நலன் விரும்பும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
நன்றி அன்பு, பாலா
ஸ்வேதா விரைவில் குணமடைய வேண்டும்.
ennal mudinththa oru pinnUtta kayamai
பாலா,
தனி மடல் அனுப்பியுள்ளேன்....பதிலை எதிர்பார்க்கிறேன்.
//நலன் விரும்பும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
நன்றி அன்பு, பாலா
ஸ்வேதா விரைவில் குணமடைய வேண்டும்.
//
நன்றி, மதுமிதா.
//மெளல்ஸ், பெங்களூர் said...
பாலா,
தனி மடல் அனுப்பியுள்ளேன்....பதிலை எதிர்பார்க்கிறேன்.
//
I will respond to your mail, today evening. Thanks !
Update
*******
I traced the mobile no. of Swetha's father and spoke to him. He has been asked by the doctor / hospital authorities to come to the hospital tomorrow. I understand (guess) that around 50,000 has been collected till now (including some amount I sent yesterday on behalf of Anbu and myself). Some more blogger friends have promised (via email) to help. Things are looking optimistic.
Actually Mr.Shanmugam (Swetha's father) had earlier gone to Vellore CMC where he was asked to proceed to Sri Ramachandra hospital and Dr. Ranjith was recommended by some one from Ramakrishan Mutt at Mylapore. The surgery will be performed by Dr. KR Balakrishan. Will keep you informed on further happenings.
I spoke to the GM (at the hospital) again today and asked him if additional financial concession can be provided. He told me that he would check and try to help as much as possible in this case.
Let us pray and hope for the best.
Thanks to all of you for your support.
enRenRum anbudan
BALA
Dear Friends,
Till today, Rs.26000 has been collected and sent to Sri Ramachandra hospital, by way of cheque.
Thanks !
உதவும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் பல.
எனது பங்களிப்பு பற்றி நாம் தொலைபேசி விட்டோம்..நண்பர்களிடமும் முயற்சித்துக் கொண்டுள்ளேன்
அன்புக்குரிய பாலாவுக்கும், உதவிய, உதவிமனம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். இயன்ற உதவியை தொடருவோம்...
கருணையுடன் கூடிய சிறந்த செயல். பிரார்த்திக்கும், உதவும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அதில் என்னையும் இணைத்துக் கொள்ள விழைகிறேன்.
சகோ. எ.அ.பாலா அல்லது சகோ. அன்பு எனக்கு தனி மடல் அனுப்ப இயலுமா?
அன்புடன்
இறை நேசன்.
நண்பர்களே,
இன்று குழந்தையின் தந்தையுடன் பேசினேன். கிட்டத்தட்ட ஒரு லட்சம் திரட்டப்பட்டு விட்டதாக, மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிவித்தார். நமது வலைப்பதிவரின் பங்கு இதில் 26000. அறுவை சிகிச்சைக்கான தேதி நவம்பர் 17-ஆக குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்னும் ரூ.5000 வரும் என்று எதிர்பார்க்கிறேன். அதை சர்ஜரிக்குப் பின் தேவையான மருத்துவச் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம். குழந்தையின் மருத்துவருடன் இன்றும் நேற்றும் பேச முடியவில்லை. பேசிய பிறகு, தகவல் தருகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
இறைநேசன்,
எனது ஈமெயில் balaji_ammu@yahoo.com. மடல் அனுப்பவும். விவரம் தருகிறேன்.
நேரடியாக மருத்துவமனைக்கு செக் அனுப்புவதற்கான விவரம் பதிவிலேயே உள்ளது. பார்க்கவும். எவ்வளவு
அனுப்பினீர்கள் என்று மடல்வழி என்னிடம் தெரிவித்தால்,மருத்துவமனையில் செக் (check) செய்வதற்கு
ஏதுவாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்
பாலா
மேலதிக தகவல்களுக்கு நன்றி.
Dear Anbu,
Thanks for everything !
பாலா எப்படி இருக்கீங்க... ஸ்வேதா பற்றி வேறேதும் தகவல் கிடைத்ததா. முடிந்தால் தொடர்புகொண்டுவிட்டு தகவல் தெரியப்படுத்துங்கள். நன்றி.
Dear Anbu,
I have sent a mail to you.
Dear Friends,
Update on Swetha
****************
I am in constant touch with the hospital and swetha's father. The surgery which was fixed for today got postponed to next week as the child developed cold and fever.
Herfather told me that Swetha got a bit scared on seeing the hospital environment. Let us hope and pray that she gets fit enough to undergo surgery.
Our bloggers' contribution for the surgery was 38000/-. I still have 2000/- with me. It can be used
for post operative medicinal expenses.
I thank all the donors and all thamiz blogger friends who wish and pray for the wellbeing of Swetha.
enRenRum anbudan
BALA
Dear Friends,
Update on Swetha
****************
The surgery was not performed as planned due to the severe cold developed by Swetha. She was in the hospital for 8 days and discharged last week.
Now she has recovered and looks fit for surgery which (according to the doctor) is scheduled for this week.
I am in touch with the hospital and her family and will keep you updated on the progress.
enRenRum anbudan
BALA
பாலா அவர்களுக்கு,
மிக நல்ல முயற்சி. இந்தப் பதிவை முன்னர் பார்க்க முடியவில்லை. தங்கள் முயற்சியும், அதைத் தொடர்ந்து follow-up செய்கின்ற விதமும் மிகவும் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்!
ஸ்வேதாவிற்கு மிகச் சிறப்பான வகையில் அறுவை சிகிச்சை நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
பின்னூட்டங்களில் நாமக்கல் சிபி நாராயணா ஹிருதாலாயா பற்றி சொல்லியிருந்தார். அது Bangalore-ல் bommasandra-வில்தான் இருக்கிறது. அதன் சுட்டி இங்கே
எனது வீட்டிற்கு அருகில் இருந்ததால் அதைப் பற்றி சொல்ல நினைத்தேன்.
Post a Comment